கோடாநாடு கொலை கொள்ளை வழக்கு: சாட்சிகள் விசாரணை

கோடாநாடு கொலை கொள்ளை வழக்கு: சாட்சிகள் விசாரணை
X

விசாரணை நடைபெற்ற பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்.

நீலகிரி மாவட்ட பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோடாநாடு கொலை, கொள்ளை தொடர்பாக 2 சாட்சிகளிடம் விசாரணை.

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கூடலூர் பகுதியை சேர்ந்த அனீஸ் மற்றும் சாஜியிடம் உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. விசாரணையில், கோடநாடு தனிப்டை விசாரணை அதிகாரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத், கூடுதல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி , கோத்தகிரி ஆய்வாளர் வேல் முருகன் ஆகியோர் காலை 11 மணி முதல் நடத்திய விசாரணை இரவு 8 மணி அளவில் நிறைவு பெற்றது.

முன்னதாக சாஜி, அனிஷ் ஆகியோர் கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்ற அன்று, ஜித்தன் ஜாய் உள்ளிட்ட 8 பேர் கூடலூர் வழியாக கேரளா சென்றபோது அவர்களை கூடுதல் போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது ஜித்தன் ஜாய் உள்ளிட்ட 8 பேரை விடுவிக்க சாஜி மற்றும் அனீஷ் ஆகிய இருவரும் அதிமுக வர்த்தகர் அணி அமைப்பாளர் சகோதரர் சுனில் உடன் சேர்ந்து சிபாரிசு செய்து அவர்களை கேரளாவுக்கு தப்பிக்க வைத்த குற்றச்சாட்டில் 36 வது சாட்சிகளாக சேர்க்கப்பட்டு உள்ளவர்கள் என்பதால் இவர்களிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நாளை கூடலூரை சேர்ந்த அதிமுக வர்த்தகர் அணி அமைப்பாளர் சகோதரர் சுனிலிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!