கோடநாடு வழக்கு இருவருக்கு ஜன 3 வரை நீதிமன்றக் காவல்

கோடநாடு வழக்கு இருவருக்கு ஜன 3 வரை நீதிமன்றக் காவல்
X

பைல் படம்.

இவ்வழக்கில் கார் ஓட்டுனர் கனராஜின் சகோதர் மற்றும் உறவினருக்கு காவல் நீட்டிக்கப்பட்டு கூடலூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுக்கு பங்குதாரராக உள்ள கோடநாடு எஸ்டேட்டில் 24.4.2017-ம் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தடயங்களை அழித்ததாக கார் ஓட்டுனர் கனகராஜின் அண்ணன் தனபால், நெருங்கிய உறவினர் ரமேஷ் ஆகிய 2 பேரை கடந்த அக்டோபர் 25-ம் தேதி போலீசார் கைது செய்தனர். நீதிமன்ற காவல் முடிவடைந்ததால் போலீசார் தனபால், ரமேஷ் ஆகிய 2 பேரை கூடலூர் கிளை சிறையில் இருந்து அழைத்து வந்து உதகை மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

வழக்கில் கைதான தனபால், ரமேஷ், ஆகிய 2 பேருக்கு மேலும் 2 வாரம் நீதிமன்ற காவலை நீட்டித்து வருகிற ஜனவரி 3-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்