கோடநாடு வழக்கில் இருவரிடம் இன்று மீண்டும் விசாரணை: மேலும் இருவர் ஆஜர்
X
பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்.
By - N. Iyyasamy, Reporter |23 Sept 2021 7:30 AM IST
கோடநாடு வழக்கு விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடந்து வரும் நிலையில் இன்று 5-6 ம் நபர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேரில் நேற்று 8 ம் நபர் சந்தோஷ் சாமி 9 மனோஜ்சாமி ஆகியோர் உதகை பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனிப்படை போலீசார் முன் விசாரணைக்கு ஆஜரான நிலையில் மீண்டும் இன்று இரண்டாவது நாளாக அவர்களிடம் விசாரணை தொடர்கிறது.
இது தவிர இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 5 ம் நபர் சதீஷன் 6 ம்நபர் பிஜுன் குட்டி ஆகியோர் இன்று உதகையில் உள்ள பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனிப்படை போலீசார் முன் ஆஜராக உள்ளனர்.
இதையடுத்து மொத்தம் இன்று 4 பேரிடர் விசாரணை நடக்கிறது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu