கோடநாடு வழக்கு: ஜாமீன் மனுவில் தளர்வுகள் அளித்து உத்தரவு

கோடநாடு வழக்கு: ஜாமீன் மனுவில் தளர்வுகள் அளித்து உத்தரவு
X

நீலகிரி மாவட்ட நீதிமன்றம்.

பிணையதாரர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம், ஆனால் ரத்த சொந்தங்களாக இருக்க வேண்டும் என தளர்வு அளிக்கப்பட்டது.

உதகை கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் இரண்டாவது நபராக குற்றம் சாட்டப்பட்ட வாளையார் மனோஜிக்கு ஜாமினில் தளர்வு அறிவித்தது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக 50 ஆயிரம் சொத்து மதிப்புள்ள இரு நபர் ஜாமின்தாரர் நீலகிரி அல்லது கோவையைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும் என்ற நிபந்தனையால் பிணையதாரர்கள் கிடைக்காததால் மனோஜ் குன்னூர் சிறையில் இருந்தார். தற்போது அவரது ஜாமின் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி உதகை கோர்ட்டில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இன்று மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்ஜய் பாபா பிறப்பித்த உத்தரவில், பிணையதாரர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால் ரத்த சொந்தங்களாக இருக்க வேண்டும் என்று ஜாமின் நிபந்தனையில் தளர்வு கொடுத்து உத்தரவிட்டார

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!