கோடநாடு வழக்கு விசாரணை: இன்று இருவர் ஆஜர்

விசாரணைக்கு ஆஜரான சதிஷன் மற்றும் பிஜுன்குட்டி.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காண விசாரணை உதகை பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்து வரும் நிலையில், தற்பொழுது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 5 மற்றும் 6 ஆம் நபர்களான சதீஷன், பிஜுன் குட்டி ஆகியோர் ஆஜராகி விசாரணை துவங்கியது.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணையானது ஐஜி, நீலகிரி எஸ்பி, ஏடிஎஸ்பி தலைமையில் உதகையிலுள்ள பழைய எஸ்பி அலுவலகத்தில் நடந்து வரும் நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரில் இதுவரை முதல் நபராக குற்றம் சாட்டப்பட்ட சயான், 4 ம் நபர் ஜம் சீர்அலி, ஆகியோரிடம் விசாரணை நடந்தது அதன் பின் நேற்று 8-9 ம் நபர்களான சந்தோஷ் சாமி, மனோஜ்சாமி, ஆகியோரிடமும் இதையடுத்து இன்று இவ்வழக்கில் 5 - 6 நபர்கள் சதிஷன், பிஜுன்குட்டி ஆகியோரிடம் விசாரணை நடந்து வருகிறது.
நேற்றைய தினம் எட்டு மற்றும் ஒன்பதாம் நபர்களிடம் நடைபெற்ற விசாரணையானது இன்று வரை நடந்து வருகிறது இதனிடையே கொடநாடு எஸ்டேட்டில் கணினி ஆபரேட்டராக இருந்த தற்கொலை செய்து கொண்ட தினேஷின் கணினி நிறுவனத்தின் ஒப்பந்ததாரர் சுரேஷ் என்பவரிடம் நேற்று இரண்டு மணி நேரம் விசாரணை நடைபெற்றுள்ளது.
இந்த வழக்கு விசாரணையில் நேற்று 3 பேர் இன்று இரண்டு பேர் என அடுத்தடுத்து விசாரணைகள் தொடர்ந்து வருவது எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu