கோடநாடு வழக்கு விசாரணை: இன்று இருவர் ஆஜராக சம்மன்

கோடநாடு வழக்கு விசாரணை: இன்று இருவர் ஆஜராக சம்மன்
X

பைல் படம்.

கோடநாடு வழக்கு மறு விசாரணை நடந்து வரும் நிலையில் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 8, 9 ம் நபர்கள் இருவர் ஆஜராக உள்ளனர்.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுடைய உறவினர்கள் நண்பர்கள் என அனைவரிடமும் மேற்கு மண்டல ஐஜி சுதாகர், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் தலைமையில் 5 தனிப்படைகள் கொண்ட போலீசார் பல கோணங்களில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் முதல் நபராக உள்ள சயான் மற்றும் 4 நபர் ஜம்சீர் அலியிடம் ஏற்கனவே விசாரணை நடந்து முடிந்த நிலையில், எட்டாம் நபராக உள்ள சந்தோஷ்சாமி ஒன்பதாம் நபராக உள்ள மனோஜ் சாமிக்கு போலீசார் கடந்த வாரம் ஆஜராக சம்மன் அனுப்பி இருந்த நிலையில் கேரளாவில் நிபா வைரஸ் தொற்று எதிரொலியாக அவர்கள் இருவரும் ஆஜர் ஆகவில்லை.

இதையடுத்து இவர்கள் இருவரும் இன்று ஆஜராக உத்தரவிட்டதைடுத்து, சந்தோஷ் சாமி, மனோஜ்சாமி ஆகிய இருவரும் உதகையில் உள்ள பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று ஆஜராக உள்ளனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயான், ஜம் சீர் அலி ஆகிய இரண்டு பேரிடம் விசாரணை நடந்து முடிந்த நிலையில் இன்று மீண்டும் சந்தோஷ்சாமி, மனோஜ் சாமி ஆகிய இருவரிடம் விசாரணை நடைபெற உள்ளது. இதனால் கொடநாடு வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் பரபரப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!