கோடநாடு வழக்கு: இன்று 4 பேரிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு

கோடநாடு வழக்கு: இன்று 4 பேரிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு
X

விசாரணை முடிந்து வெளியே வரும் சந்தோஷ்சாமி மற்றும் மனோஜ் சாமி.

உதகை பழைய எஸ்பி அலுவலகத்தில் டிஐஜி, ஐஜி, எஸ்பி தலைமையில் நடந்த 8 மணி நேர விசாரணை நிறைவு பெற்றது.

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சந்தோஷ்சாமி மற்றும் மனோஜ் சாமி ஆகியோரிடம் 2- நாளாக மேற்குமண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான தனிபடை போலிசார் 19 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்த நடத்திய விசாரணை நிறைவு பெற்றது. அத்துடன் 5-வது குற்றவாளிகளாக சேர்க்கபட்டுள்ள சதீசன் மற்றும் 6-வது குற்றவாளியாக சேர்க்கபட்டுள்ள பிஜின் குட்டி ஆகியோருடன் 7 மணி நேரமாக நடைபெற்ற விசாரணையும் நிறைவு பெற்றது.

4 பேரிடமும் கொள்ளை குறித்தும், கொள்ளையடிக்க தூண்டியது யார்? கொள்ளையடித்த ஆவணங்கள் மற்றும் பொருட்கள் குறித்தும் போலிசார் அடுக்கடுக்கான கேள்வி கேட்டு வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 6 பேரிடம் இதுவரை விசாரணை நடந்து முடிந்த நிலையில் மீதமுள்ளோரிடம் விரைவில் விசாரணை நடைபெறும் என தெரிகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!