கோடநாடு வழக்கு: 2 பேரிடம் இன்று விசாரணை

கோடநாடு வழக்கு: 2 பேரிடம் இன்று விசாரணை
X

விசாரணைக்கு ஆஜரான கோடநாடு எஸ்டேட் அலுவலக ஊழியர்கள்.  

கோடநாடு எஸ்டேட் அலுவலக ஊழியர்கள் இருவரிடம் டி.எஸ்.பி சந்திரசேகர் தலைமையில் தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கின் கூடுதல் விசாரணையானது ஏ.டி.எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நாள்தோறும் அரசு தரப்பு சாட்சிகள், குற்றம் சாட்டப்பட்வர்கள் என அனைவரிடமும் ஊட்டியில் உள் பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணை நடைப்பெற்று வருகிறது.

இதுவரை குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரில் 6 பேரிடம் விசாரணை நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2017 ம் ஆண்டு ஜூலை 3-ம் தேதி கொடநாடு எஸ்டேட்டில் கணினி ஆப்ரேட்டராக இருந்த தினேஷ் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலையில் மர்மம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தனிப்படையினர் இந்த வழக்கையும் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 21-ம் தேதி தினேஷின் குடும்பத்தினருடன் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று அவருடன் பணியாற்றிய கொடநாடு எஸ்டேட் அலுவலக உதவியாளர்கள் இருவரிடம் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை டி. எஸ்.பி சந்திரசேகர் தலைமையில் தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai marketing future