உதகை மார்க்கெட்டில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்

கொரோனா பரவல் காரணமாக, உதகை மார்க்கெட்டில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் முகக் கவசங்கள் அணிவது சமூக இடைவெளி பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நீலகிரி மாவட்டம் உதகை மார்க்கெட் பகுதியில் தென்றல் வியாபாரிகள் சங்கம் சார்பில், அனைத்து நுழைவுவாயில் பகுதிகளிலும் வரும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

நுழைவு வாயிலில் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களுக்கு உடல் வெப்பநிலை கண்டறிந்து கிருமிநாசினி பயன்படுத்திய பின்பு அனுமதிக்கப்பட்டு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மார்க்கெட் பகுதிக்கு வந்து செல்லும் நிலையில், கபசுரக் குடிநீர் வழங்கப்படுவதை பலரும் பாராட்டினர்.

இந்த நிகழ்வில் தலைவர் இச்சுபாய், செயலாளர் கே.எம். மணிகண்டன், பொருளாளர் சபரீஷ், துணை செயலாளர் அபாஸ், சானூ உட்பட சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்