உதகை நகரில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

உதகை நகரில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
X

உதகையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள  பாஜக வேட்பாளர் 

உதகை நகரில் 21வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பெரிய பள்ளிவாசல், மின் அலுவலக தெரு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

உதகை நகரில் உள்ள 36 வார்டுகளிலும் போட்டியிடும் பிரதான கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் 21 வது வார்டில் பா.ஜ.க போட்டியிடும் தீபா சுரேஷ்குமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது சிறுபான்மையினர் மக்களுக்கு தேவையான திட்டங்களை பெற்று தரவும், மத்திய அரசின் மக்கள் பயன்பெறும் திட்டங்களை ஏற்படுத்திக் கொடுத்து 21 வார்டை முன்னுதாரணமாக முன்னெடுத்துச் செல்வேன் என உறுதி அளித்தார்.

முன்னதாக மாரியம்மன்,. கோவில் தெரு, மெயின் பஜார் சாலை , பெரிய பள்ளிவாசல், மின் அலுவலக தெரு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!