அரசு திட்டம் மூலம் உதகை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு வழங்கல்

அரசு திட்டம் மூலம் உதகை மருத்துவமனையில்   நோயாளிகளுக்கு உணவு வழங்கல்
X
அரசு மருத்துவமனை உள்ள நோயாளிகளுக்கு உணவு வழங்கும் திட்டம், தமிழக அரசு சார்பில் உதகையில் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள் நோயாளிகள், அவர்களை பராமரிப்போருக்கு உணவு தரும் திட்டம் இன்று துவங்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, உதகை அரசு தலைமை மருத்துவமனையில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் உணவகங்களை தேடி நோயாளிகளின் உறவினர்கள் சிரமப்படாமல் இருக்க , தமிழக அரசு இத்திட்டத்தை கொண்டு வந்துள்ளது. ஊரடங்கின் மறு உத்தரவு வரும் வரை இந்த உணவு வழங்கும் திட்டம் தொடர்ந்து நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்