உதகையில் காணொலி வாயிலாக நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

உதகையில் காணொலி வாயிலாக நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
X

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், இணையதளம் மூலமாக மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது.

உதகையில், கலெக்டர் தலைமையில் காணொலி வாயிலாக விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், இணையதளம் மூலமாக மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது. இதில், விவசாய சங்கங்களை சார்ந்த விவசாயிகள், தோட்டக்கலை இணை இயக்குநர் மற்றும் இதர துறையினை சார்ந்த அரசு அலுவலர்களும், இணையம் வழியாக கலந்து கொண்டனர்.

விவசாய சங்கங்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டு, உரிய துறை அலுவலர்களுக்கு முன்னதாக அனுப்பப்பட்டு தகுந்த விபரம் பெற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 23 கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு முடிவு காணப்பட்டது.

தோட்டக்கலைத்துறையின் மூலம் 2021-22-ஆம் ஆண்டு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து தோட்டக்கலை இணை இயக்குநர் எடுத்துரைத்தார். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் 2021-22-ஆம் ஆண்டிற்குதேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் மூலம் 675 எக்டருக்கும், ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம் மூலம் 650 எக்டருக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விவரம் தெரிவிக்கப்பட்டது.

துணைநிலை நீர் மேலாண்மை திட்டம் மூலம் நுண்ணீர் பாசன திட்டம் அமைத்திருக்கும் விவசாயிகளுக்கு கிணறு அமைக்க, நீர் தொட்டி அமைக்க மற்றும் Diesel Engine Motor ஆகியவற்றிற்கு பின்னேற்பு மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ATMA திட்டம் தொடர்பான பயிற்சி தகவல்களை, வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களை அணுகி தெரிந்து கொள்ளுமாறு விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். மேலும், விவசாயிகளின் பொது கோரிக்கைகளும் விவாதிக்கப்பட்டு உரிய விவரம் தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!