ஒமிக்ரான் வைரஸ் எதிரொலி: நீலகிரி எல்லைகளில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்

ஒமிக்ரான் வைரஸ் எதிரொலி: நீலகிரி எல்லைகளில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்
X

மாவட்ட ஆட்சி தலைவர் அம்ரித்.

மாவட்ட எல்லைகளிலுள்ள 5 சோதனை சாவடிகளில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் தயார்.

ஓமிக்ரான் அச்சுறுத்தலையடுத்து சர்வதேச நாடுகளிலிருந்து கோவை விமான நிலையம் வந்திறங்கும் பயணிகள் பற்றிய தகவல்கள் பகிரப்பட்டு அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சி தலைவர் அம்ரித் கூறினார்.

சர்வதேச நாடுகளிலிருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய மிகவும் கண்காணிக்கப்பட வேண்டிய 16 பேர்களில் யாரும் நீலகிரி மாவட்டத்திற்கு வரவில்லை என தெளிவுபடுத்தினார். மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பு ஊசி முதல் தவணை 99% பேர்களுக்கும், இரண்டாவது தவணை 86% பேர்களுக்கும் செலுத்தி தமிழகத்தில் முன்னிலை வகிப்பதாகவும் அவர் கூறினார்.

ஓமிக்ரான் அச்சுறுத்தலையடுத்து மாவட்டத்தில் அன்றாட கோவிட் 19 பரிசோதனை 2000 யாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறினார் ஒமிக்ரான் அச்சுறுத்தலை எதிர்கொள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதோடு மத்திய மாநில அரசின் கோவிட் வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுவது கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் திரு அம்ரித் கூறினார் சுகாதாதார பணிகள் துணை இயக்குநர் பாலுசாமி உடனிருந்தார்.

Tags

Next Story