/* */

உதகையில் ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்ட போதை பொருள் பறிமுதல்

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆம்புலன்ஸ் டிரைவர் உட்பட 3 மாணவர்கள் என 4 பேரை கைது செய்தனர்.

HIGHLIGHTS

உதகையில் ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்ட போதை பொருள் பறிமுதல்
X

கர்நாடகா மாநிலத்தில் இருந்து கக்கனல்லா சோதனைச்சாவடி வழியாக, குன்னூருக்கு செல்ல ஆம்புலன்ஸ் நேற்று இரவு வந்தது. போலீசார் ஆம்புலன்சை நிறுத்தியும் டிரைவர் நிறுத்தாமல் சென்று விட்டார். புதுமந்து போலீசார் தலைகுந்தா சோதனை சாவடியில் சோதனை செய்ய நிறுத்தியும், ஆம்புலன்ஸ் வேகமாக ஊட்டியை நோக்கி சென்றது.

பின்னர், போலீசார் ஹில்பங்க் பகுதியில் ஆம்புலன்சை நிறுத்தி சோதனை செய்ததில், தடை செய்த போதைப் பொருட்கள் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் ஆம்புலன்சை பறிமுதல் செய்து, டிரைவர் உள்பட 4 பேரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

குன்னூரை சேர்ந்த தப்புரேஸ் (20), கல்லூரி மாணவர்கள் 3 பேருடன் கர்நாடகா மாநிலம் மைசூருவில் இருந்து குன்னூருக்கு போதை பொருள்கள் கொண்டு வந்தது தெரிந்தது. அவர்களிடம் 3 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆம்புலன்ஸ் டிரைவர் தப்புரேஸ், 3 மாணவர்கள் என 4 பேரை கைது செய்தனர்.

Updated On: 12 March 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  2. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  3. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  7. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  8. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  9. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  10. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு