/* */

உதகையில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு நிவாரண உதவி

உதகையில், கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த தொழிலாளர்களுக்கு, திமுக சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

உதகையில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு நிவாரண உதவி
X

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா வழிகாட்டிகள், சவரத் தொழிலாளர்கள், திருநங்கைகள், இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் தொழிலாளர்கள், சுற்றுலா வாகன ஓட்டிகள், சாலையோர வியாபாரிகள் என பலரும் நெருக்கடியான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையில், உதகை நகர திமுக செயலாளர் ஜார்ஜ், ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டோருக்கு, ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள மளிகை தொகுப்புகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு வழங்கினார்.

அவர் பேசுகையில், தமிழக முதல்வர் கொரோனோ கட்டுப்பாடுகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தோடு, கருணாநிதி பிறந்தநாளில் நிவாரணம் பொருட்கள் வழங்கப்படுகிறது என்றார்.

Updated On: 5 Jun 2021 5:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது