நீலகிரி மாவட்ட ஒக்கலிகர் சங்கத்தினரின் தேர் திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்பு

நீலகிரி மாவட்ட ஒக்கலிகர் சங்கத்தினரின் தேர் திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்பு
X

ஒக்கலிகர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற தேரோட்டம்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒக்கலிகர் சங்கத்தின் முக்கிய உறுப்பினர்களும் திரளான பக்தர்களும் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டனர்.

உதகை மாரியம்மன், காளியம்மன் சித்திரை தேர் திருவிழா ஆண்டு தோறும் மார்ச் மாதம் துவங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பின் காரணமாக சித்திரை தேர் திருவிழா நடைபெறவில்லை.

இந்த முறை தமிழக அரசின் ஊரடங்கு தளர்வு கோவில் திருவிழாக்களை நடத்த அனுமதி அளித்ததை அடுத்து, இரண்டு ஆண்டுகள் நடைபெறாமல் இருந்த உதகை மாரியம்மன், காளியம்மன் தேர் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

இந்த தேர் திருவிழா 30 நாட்கள் 30 உபயதாரர்கள் மூலம் நாள்தோறும் நடைபெற உள்ளது. இதன் முதல் துவக்கமாக நீலகிரி மாவட்ட ஒக்கலிகர் சங்கம் சார்பில் முதல் நாள் தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில் பாரம்பரிய நடனத்துடன் கொட்டும் மழையில் தேர்த்திருவிழா நடைபெற்றது. இதில் உற்சவமூர்த்தி புலி வாகனத்தில் பூ பல்லக்கில் ஆதிபராசக்தியாக பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார்.

இதில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒக்கலிகர் சங்கத்தின் முக்கிய உறுப்பினர்களும் திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!