/* */

நீலகிரி சேவாகேந்திரம் சார்பில் 5000 பேருக்கு நிவாரணப்பொருட்கள்

உதகையில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வை ஆட்சியர் தலைமையில் சேவாகேந்திர நிர்வாகிகள் வழங்கினர்.

HIGHLIGHTS

நீலகிரி சேவாகேந்திரம் சார்பில் 5000 பேருக்கு நிவாரணப்பொருட்கள்
X

நீலகிரி சேவா கேந்திரா சார்பில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முன்னிலையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

உதகையில் சேவா பாரதி மற்றும் நீலகிரி சேவா கேந்திரம் சார்பில் 1500 மதிப்புள்ள மளிகை தொகுப்பு 5 ஆயிரம் பேருக்கு கொரோனா நிவாரணப் பொருள் வழங்கும் நிகழ்வு உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கொரோனா தொற்றால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வாழ்வாதாரத்தை இழந்துள்ளவர்களுக்கு சேவா கேந்திரம் சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் சேவா கேந்திரம் சார்பில் ஒரு கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் முன்னிலையில் துவக்கப்பட்டது.

ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் காய்கறிகள், எதிர்ப்பு சக்தி மிக்க ஆர்சனிக் மாத்திரைகள் முதற்கட்டமாக முடிதிருத்தும் 150 தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சேவா கேந்திரா நிர்வாகிகள்,

கொரோனா பாதிப்பால் தனிமைப் படுத்தப்பட்டு உள்ள பகுதிகளுக்கு பத்து நாட்களில் ஒரு லட்சம் உணவுப் பொட்டலங்கள், 4 லட்சம் பேருக்கு ஆர்சனிக் ஆல்பம் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள், 1500 மதிப்புள்ள மளிகை தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறினர். வாழ்வாதாரத்தை இழந்துள்ளவர்கள் தகவல் கொடுத்தால் அவர்களுக்குத் தேவையான நிவாரண பொருட்கள் சேவா பாரதி,நீலகிரி சேவா கேந்திரா மூலம் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

Updated On: 26 May 2021 8:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  3. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  4. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  5. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  6. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  7. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  8. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  9. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    நண்பர்களின் பிறந்தநாளுக்கு நகைச்சுவையான தமிழ் வாழ்த்துக்கள்!