ஊட்டியில் ரயில்வே ஸ்டேசன் மாஸ்டருக்கு கொரோனா!

ஊட்டியில் ரயில்வே ஸ்டேசன் மாஸ்டருக்கு கொரோனா!
X
ரயில் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள், பணியாளர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இது தவிர ஊட்டி-குன்னூர் இடையே தினமும் மூன்று முறை மலை ரயில் இயக்கப்படுகிறது. வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்கள் ஆகிய இடங்களில் இருந்துவரும் சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.

இதற்கிடையே ஊட்டி ரயில் நிலைய அதிகாரிக்கு (ஸ்டேஷன் மாஸ்டர்) உடல் நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்குகொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுசிகிச்சை பெற்று வருகிறார் .

சுற்றுலா பயணிகள் அதிகம்பேர் வந்து செல்லும் இடம் என்பதால் ரயில் நிலையத்தில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ரயில் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள், பணியாளர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற் கொள்ளப்படுகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!