பருவமழைக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள்.
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் உதகை பிங்கர்போஸ்ட்டில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்ரியா சாஹூ தலைமை தாங்கி பேசினார். பின்னர் அவர் பேட்டியின் போது கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் 283 அபாயகரமான இடங்களில் 22 இடங்களில் அடிக்கடி மழையால் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அங்கு தனி கவனம் செலுத்தி கண்காணிக்கப்படுகிறது. அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க 456 முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. பேரிடர் சுகாதாரத்துறை மூலம் 13 நடமாடும் மருத்துவ வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
மேலும் 23 நிலையான மருத்துவ குழு பயிற்சி அளித்து தயாராக உள்ளது. 42 மண்டல குழுவின் கீழ் 3 ஆயிரத்து 25 பேர் முதல்நிலை பொறுப்பாளர்களாக உள்ளனர். நீலகிரியில் 15 அணைகள் உள்ளது. தொடர் மழையால் நீர்மட்டம் உயர்ந்து வருவதோடு, 70 சதவீதம் நிரம்பி உள்ளது. அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அணைகள் நிரம்பும் பட்சத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு திறக்கப்படும். நீலகிரியில் மழையால் பாதிப்பில்லை. தேவைப்பட்டால் தேசிய பேரிடர் மீட்பு படை வரவழைக்கப்படும் என அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu