கோடநாடு வழக்கு குறித்த ஆலோசனைக் கூட்டம்
பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்.
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தின் மறு புலன் விசாரணை மிக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் மற்றும் டிஐஜி முத்துசாமி, தனிப்படை விசாரணை அதிகாரியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத், கூடுதல் கண்காணிப்பாளர் கிருஷ்ணை மூர்த்தி, கோத்தகிரி ஆய்வாளர் வேல்முருகன் ஆகியோர் உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அவசர ஆலோசனை நடத்தினர்.
முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயான் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் , கார் விபத்தில் உயிரிழந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜன் சகோதரர் மற்றும் மனைவி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு நிலையில் நேற்று குற்றவாளிகளை கேரளாவுக்கு தப்பிச் செல்ல உதவியாக இருந்தவரிடம் 5 மணி நேரம் உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்று பிற்பகல் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்கும் பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் டிஐஜி முத்துசாமி , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, கோத்தகிரி ஆய்வாளர் வேல்முருகன் ஆகியோர் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக கோடநாடு கொலை கொள்ளை வழக்கின் விசாரணை குறித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த வழக்கில் கடந்த 10 நாட்களாக நடைபெற்ற விசாரணை குறித்தும் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில், இக்ககுற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மனோஜ் சாமி , ஜிதின் ஜாய், சந்தோஷ் சாமி, உதயன், பிஜின்குட்டி, தீபு, சதிசன், ஜெம்சீர் அலி எட்டு பேர் தற்போது கேரளாவில் உள்ளனர். இந்நிலையில் கேரளாவில் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் உதவி ஆய்வாளர் தலைமையில் நான்கு பேர் விசாரணை நடத்த நடத்த கேரளா சென்றுள்ளனர்.
இந்நிலையில் மற்றொரு குழு சேலம் மாவட்டத்தில், ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ், கோவை மாவட்டத்தில் சயான் சென்ற கார், கோவை - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளாகி முக்கியமாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சயானின் மனைவி மற்றும் குழந்தை உயிரிழந்த நிலையில் மற்றொரு தனிப்படை போலீசார் சேலம் மற்றும் கோவை சென்றுள்ளதாக காவல்துறை தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதால் யாரிடமும் விசாரணை நடைபெறவில்லை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu