நீலகிரியில் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடல்

நீலகிரியில் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடல்
X

நீலகிரியில் அனைத்து சுற்றுலா தலங்களும் 7 மாதங்களுக்கு பின் மீண்டும் மூடப்பட்டுள்ளது.

தற்போது, கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசு, 20 ம் தேதி முதல் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு அறிவித்துள்ளது.நாளை, (20ம் தேதி) முதல் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா உட்பட அனைத்து பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் மீண்டும் 7 மாதங்களுக்கு பின் மூடப்படுகிறது. இந்நிலையில் ஊட்டி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, தலைமையில் கொரோனா தடுப்பு குறித்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து அரசு துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.

பின், நிருபர்களிடம் மாவட்ட கலெக்டர் திவ்யா, கூறுகையில், நீலகிரியில், நாளை, (20ம் தேதி) முதல், சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்படும். சுற்றுலா போர்வையில் யார் வந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தொழில் ரீதியாக வருகை புரிவோருக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். இ- ரிஜிஸ்ட்ரேஷன் முறை தொடரும் என்றார்.கொரோனா தொற்று நோயாளிகள் சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனை மற்றும் நட்சத்திர உணவகங்கள் சிகிச்சை மையங்களாக செயல்பட முன் வந்தால் அனுமதி வழங்கப்படும் என்றார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்