நீலகிரி மாவட்டத்தில் தலைக்கவசம் அணியாதவர்கள் மீது வழக்கு பதிவு

நீலகிரி மாவட்டத்தில் தலைக்கவசம் அணியாதவர்கள் மீது வழக்கு பதிவு
X

பைல் படம்.

நீலகிரியில் ஹெல்மெட் அணியாமல் சென்றதற்கு இதுவரை 12,092 வழக்குகள் பதியப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடந்த மாதம் 01.08.2021 ஆம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வோர் இருவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் எனவும், இதற்கு பொதுமக்கள் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்களும் இதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து 01.08.2021 ஆம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் நடத்தப்பட்ட தணிக்கையில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்லும் நபர் தலைக்கவசம் அணியாமல் சென்றதற்கான மட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அவ்வாறு பதிவு செய்யப்பட்ட வழக்குகள் விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

உதகை நகரம் :2573

உதகை ஊரகம் :1638

குன்னூர் :5344

கூடலூர் :1948

தேவாலா : 589

மொத்தம் :12092

மேலே குறிப்பிடப்பட்டள்ள வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இனிவரும் காலங்களிலும் பொதுமக்கள் அனைவரும் தலைக்கவசம் அணிந்து பயணம் செய்து விபத்துகள் மற்றும் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க காவல்துறைக்கு உரிய ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!