கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

ஊட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி நடைபெற்றது.

ஊட்டியில் உள்ள முன்னாள் தியேட்டர் உரிமையாளர் சாதிக் என்பவர் அவரது கட்டடத்தில் கடையை நடத்தவிடாமல் தடுப்பதாகவும், தன்னுடைய ஆட்டோ தவணைகள் செலுத்திய பின்னும் ஆவணங்களை தர மறுப்பதாகவும், தன்னை வாகனம் ஏற்றி கொன்றுவிடுவதாக மிரட்டி வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்டோ ஓட்டுனர் குடும்பத்தோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணையை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் மனு கொடுக்க வந்த ஆட்டோ ஓட்டுனர் நூர்தீன்,அவரது மனைவி சர்புநிசா,மற்றும் குழந்தைகள் பர்ஹான்,சனா பாத்திமா,தாயார் ஜெமீலா ஆகியோர் தங்களை சாதிக் என்பவர் பல்வேறு விதங்களில் அச்சுறுத்துவதாக கூறி மனு அளிக்க வந்தனர்.

அப்போது மாவட்ட கலெக்டர் கொரோனா தடுப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார் அப்போது திடீரென ஆட்டோ ஓட்டுனர் நூர்தீன் தன் மீதும் குடும்பத்தினர் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயற்சி செய்தார். உடனடியாக அருகில் இருந்த காவல்துறையினர் மண்ணெண்ணெய் கேனை அவரிடம் இருந்து பறித்ததோடு, அவர்மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர்.முறைப்படி புகார் அளித்தால் புகார் மீது உரிய விசாரணை மேற்கொள்வதாக போலீசார் உறுதி அளித்து அவரையும் அவரது குடும்பத்தினரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

Tags

Next Story
Will AI Replace Web Developers