உதகையில் சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது

உதகையில் சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது
X

சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர்.

ஜெ.,பல்கலைகழகம் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்கட்சி தலைவர்கள் கைது எதிரொலியாக அதிமுகவினர் உதகையில் சாலை மறியல்.

தமிழக சட்டசபையில் இன்று ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்க திமுக அரசு தீர்மானத்தை அறிவித்தது. இதற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூட்டத் தொடரில் இருந்து வெளியேறினர். இதையடுத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களுடன் அதிமுக எம்எல்ஏ-க்களும் கைது செய்யப்பட்டனர். இதற்கு தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் உதகை காப்பி ஹவுஸ் சந்திப்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்டதால் போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!