உதகையில் அதிமுக சார்பில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

உதகையில் அதிமுக சார்பில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
X
ஊட்டியில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
உதகையில் அ.தி.மு.க. சார்பில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் சொத்து வரியை ௧௫௦ சதவீதம் உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து உதகையில் நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை இன்று வரை நிறைவேற்றாமல், 150 சதவிகிதம் சொத்து வரி உயர்த்தியதை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

கண்டன பொது கூட்டத்தில் பேசிய மாவட்டக் கழக செயலாளர் கப்பச்சி வினோத், தமிழகத்தில் ஸ்டாலின் அறிவித்திருப்பது சொத்து வரியா அல்லது சொத்தை அபகரிக்கும் வரியா என கேள்வி எழுப்பினார்.மேலும் தி.மு.க.வினரின் நில அபகரிப்புக்காகவே ஜெயலலிதா தனி நீதிமன்றம் கொண்டு வந்ததையும் குறிப்பிட்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நீலகிரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர் அர்ஜுனன், கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன். ஜெயசீலன் மற்றும் குன்னூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு, அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : கர்நாடகா பெண் வேட்பு மனு ஏற்கப்பட்ட சர்ச்சையால்,  பட்டியல் வெளியிட தாமதம்