கோடநாடு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

கோடநாடு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
X

பைல் படம்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை 81 நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் ஹாஜகான் கூறினார்.

கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை இன்று உதகை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் பாபா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசுதரப்பு வழக்கறிஞா் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோா் ஆஜராகினர். எதிா்தரப்பு வழக்கிறிஞா்களும் ஆஜராயினர். குற்றம் சாட்டப்பட்ட 10 போ்களில் சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் ஆஜராயிருந்தனர்.

இந்த வழக்கில் கூடுதல் விசாரணை நடந்து கொண்டிருப்பதால் அரசுமற்றும் போலீசாா் தரப்பில் நீதிபதியிடம் கால அவகாசம் கேட்ட நிலையில் வழக்கினை டிசம்பா் 23 ம்தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி சஞ்சய்பாபா உத்தரவிட்டார்.

பின்னா் அரசு தரப்பு வழக்கறிஞா் ஷாஜகான் செய்தியாளா்களிடம் கூறியதாவது, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தனபால், மற்றும் ரமேஷ் ஆகியோாின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கின் புலன் விசாரணை முக்கியமான கட்டத்தை எட்டியிருப்பதாலும், தற்சமயம் அவா்களை ஜாமீனில் விடுவதை விசாரணையை பொிதும் பாதிப்பை ஏற்படுத்தும் என நீதிபதியிடம் எடுத்துரைத்துள்ளோம். கனகராஜின் ஆதாரங்களையும், சாட்சிகளையும் கனகராஜ் இறப்பிற்கு பிறகு தனபால் அதனை அழித்துள்ளார்.

இவா்களுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவாா்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்க கூடாது என அரசு தரப்பில் எடுத்துரைக்கப்பட்டதாக கூறினார். கனகராஜ் உயிாிழந்ததிற்கு பின் தனபால் வெவ்வேறு இடங்களில் 6 சிம் காா்டுகள் வாங்கி கொலை, கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய நபர்களிடம் இவ்வாறு தான் போலீஸ் விசாரணையில் கூறவேண்டும் என கனகராஜ் வழக்கை திசை திருப்பியுள்ளார்.

இறந்து போன கனகராஜ் ரமேஷ்சைதான் கடைசியாக பாா்த்துள்ளார். எனவே இந்த வழக்கு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது, தனபால் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் எம்எல்ஏ சீட்டிற்காக தொடா்பு வைத்துள்ளது போலீஸ் விசாரணையில் தொிய வந்துள்ளது. இதனால் விாிவான விசாரணை நடைபெற்று வருவதால் இவா்களுக்கு ஜாமீன் வழங்கினால் புலன் விசாரணை பாதிக்கப்படும் என நீதிமன்றத்தில் தொிவித்துள்ளோம்.

மேலும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை 81 நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் ஹாஜகான் கூறினார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!