ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நலத்துறை மூலம் மானியம் பெற அழைப்பு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு பிவிசி குழாய் வாங்க ரூ.15,000 மானியம், புதிய மின் மோட்டார் வாங்க ரூ.10,000 மானியம் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கு ஆதிதிராவிடர், பழங்குடியினராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 2,00,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். விவசாயத்தை தொழிலாக கொண்டிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் நிலம் இருக்க வேண்டும். தாட்கோ மூலம் இதுவரை மானியம் பெறாத ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கும், சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கும், துரித மின் இணைப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து நிலுவையில் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.
வேளாண் துறையின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் இருந்து குழாய்கள் கொள்முதல் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர் தங்களது சாதிச்சான்று, வருமானச் சான்று, ரேஷன் அட்டை, இருப்பிடச்சான்று, பட்டா, சிட்டா, அடங்கல், புகைப்படம், நிலவரைபடம், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் இருந்து பெற்ற விலைப்புள்ளி ஆகியவற்றை ஆதிதிராவிட விவசாயிகள் http://application.tahdco.com, பழங்குடியின விவசாயிகள் http://fast.tahdco.com என்ற இணையதள முகவரியிலும் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு அலுவலகத்தையோ அல்லது 0423-2443064 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu