உக்ரைனில் படித்து வரும் நீலகிரி மாணவர்களை அழைத்து வர நடவடிக்கை

உக்ரைனில் படித்து வரும் நீலகிரி மாணவர்களை அழைத்து வர நடவடிக்கை
X
மின்னஞ்சல் முகவரி, தமிழ்நாட்டில் இருப்பிட முகவரி, செல்போன் எண் ஆகிய விவரங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை நேரில் அணுகலாம்

ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக உக்ரைனில் கல்வி கற்றுவரும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள், அங்கு குடியேறி வசித்து வருபவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 13 மாணவர்களின் விவரங்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வரபெற்று உள்ளது. அதற்கு ஏதுவாக மாணவர்கள் மற்றும் குடியேறியவர்கள் பெயர், பாஸ்போர்ட் எண், உக்ரைனில் வசித்து வரும் இருப்பிடம், கல்லூரி முகவரி, அங்கு உபயோகித்து வரும் செல்போன் எண், பணியில் இருப்பின் அதன் விவரம், மின்னஞ்சல் முகவரி, தமிழ்நாட்டில் இருப்பிட முகவரி, உறவினரின் முகவரி, செல்போன் எண் ஆகிய விவரங்களுடன் உதகை கலெக்டர் அலுவலகத்தை நேரில் அணுகலாம். இல்லையெனில் collrnlg@nic.in அல்லது bsectionooty@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு விண்ணப்பத்தை அனுப்பலாம். மேலும் 0423-2444013 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story