உதகையில் 75-வது சுதந்திர தின விழா அமுத பெருவிழா மாரத்தான் ஓட்டம்

உதகையில் 75-வது சுதந்திர தின விழா அமுத பெருவிழா மாரத்தான் ஓட்டம்
X

உதகையில் மாரத்தான் ஓட்டத்தை அமைச்சர் ராமச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

75வது சுதந்திர தின விழா அமுதப் பெருவிழா மாரத்தான் ஓட்டப்பந்தயம் உதகை மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட மைதானத்தில் துவங்கியது.

75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு உதகையில் இன்று சுதந்திர திருநாள் அமுத பெருவிழா மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. மலைப்பகுதி மேம்பாட்டு திறந்த வெளி அரங்கில் மாவட்ட ஆட்சியர் அம்ரித் முன்னிலையில் மாநில வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இதனை கொடியசைத்து துவக்கி வைத்தனர் .

பெண்களுக்கு 4 கி.மீ தூரமும், ஆண்களுக்கு 5 கி.மீ தூரம் நடைபெற்ற இந்த ஓட்டத்தில் 300 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று ஓடினர்.

ஓட்டத்தில் பங்கேற்றவர்கள் சேரிங்கிராஸ், மார்க்கட் வழியாக மத்திய பேருந்து நிலையம் சென்று அதே வழியாக மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட அரங்கிற்கு வந்தடைந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படது.

Tags

Next Story
ai solutions for small business