/* */

உதகை நகரில் திருட்டுச் சம்பவங்களை தடுக்க 600 கண்காணிப்பு கேமராக்கள்

உதகை நகரில் திருட்டுச் சம்பவங்களை தடுக்க 600 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

உதகை நகரில் திருட்டுச் சம்பவங்களை தடுக்க 600 கண்காணிப்பு கேமராக்கள்
X

பைல் படம்.

நீலகிரி மாவட்டம், உதகைபுகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. சுற்றுலா பயணிகள் கூட்டத்தை நோட்டமிட்டு திருட்டு, வழிப்பறி போன்ற குற்றங்கள் நடந்து வருகிறது.

இந்த குற்றங்களை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. உதகை நகரில் முக்கிய பகுதிகளில் கடை உரிமையாளர்கள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி வருகின்றனர்.

அதில் பதிவாகும் காட்சிகள் கண்காணிக்கப்படும். இதுவரை 300-க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

உதகை அரசு தாவரவியல் பூங்கா சாலையில் கார்டன் சிறு வியாபாரிகள் சங்கம் சார்பில் சொந்த செலவில் 4 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தினர்.

இந்த கேமராக்களை உதகை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

குற்றங்களை தடுக்கும் பொருட்டு கடைகள், பொதுமக்கள் கூடும் இடங்கள், குடியிருப்புகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.

உதகையில் 600 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.

Updated On: 8 April 2022 7:05 AM GMT

Related News