500 லஞ்சம் பெற்றவருக்கு 9 ஆண்டுகள் சிறை, ரூ. 6000 அபராதம்

500 லஞ்சம் பெற்றவருக்கு 9 ஆண்டுகள் சிறை, ரூ. 6000 அபராதம்
X

ஜான் பாஸ்கோ.

வாரிசுச் சான்றிதழுக்காக 500 கையூட்டு பெற்று இன்று வழங்கப்பட்ட இத்தீர்ப்பு உதகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2007ம் ஆண்டு நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தாண்டவ நடராஜன் வருவாய் ஆய்வாளர் வாரிசுச் சான்றிதழ் பெறுவதற்கு ஜான் பாஸ்கோ என்பவரிடம் 500 ரூபாய் கையூட்டு பெற்றுள்ளார். இதில் கையூட்டு பெறுவதாக அவர் மேல் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு உதகையில் உள்ள சார்பு நீதிமன்றத்தில் கடந்த 14 ஆண்டுகளாக நடைப்பெற்று வருகிறது.

இன்று இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றபோது வாரிசுச் சான்றிதழ் கொடுப்பதற்கு கையூட்டாக 500 பெற்ற தாண்டவ நடராஜனுக்கு ஒன்பது ஆண்டுகள் சிறை தண்டனையும் 6000 ரூபாய் அபராதமும் விதித்து சார்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. வாரிசுச் சான்றிதழுக்கான 500 கையூட்டு பெற்று இன்று வழங்கப்பட்ட இத்தீர்ப்பு உதகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா