தமிழகம் முழுவதும் திமுகவை வீழ்த்த ஹிந்து முன்னணி வீடு, வீடாக பிரசாரம்

தமிழகம் முழுவதும் திமுகவை வீழ்த்த  ஹிந்து முன்னணி வீடு, வீடாக பிரசாரம்
X
தமிழகம் முழுவதும் திமுகவை வீழ்த்த ஹிந்து முன்னணி, 234 தொகுதிகளிலும் வீடு, வீடாக பிரசாரம் செய்யும் என்று மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் தெரிவித்தார்.

நீலகிரி : நீலகிரிமாவட்டம், ஊட்டியில், ஹிந்து முன்னணிகட்சி சார்பில், தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின், ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது:

"ஹிந்து முன்னணி ஹிந்து ஒற்றுமைக்காக தொடர்ந்து போராடி வருகிறது. ஜாதி ஒற்றுமையை உருவாக்க பாடுபட்டு கொண்டிருக்கிறது. ஹிந்து முன்னணிக்கு விரோதமாக, கலவரத்தை சிலர் தூண்டிவருகின்றனர்.

தி.மு.க., கூட்டணியை தோற்கடிக்க மாநிலம் முழுவதும் வீடு, வீடாக ஹிந்து முன்னணி பிரசாரம் செய்யும் இவ்வாறு,அவர் தெரிவித்தார்.



Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!