வெற்றிக்கு அயராது உழைக்க திமுக கூட்டத்தில் முடிவு

வெற்றிக்கு அயராது உழைக்க திமுக கூட்டத்தில் முடிவு
X

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றிபெற அயராது உழைப்பது என நீலகிரி மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

நீலகிரி மாவட்ட திமுகழக செயற்குழு கூட்டம் மாவட்ட கழக அலுவலகம், உதகை கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட அவை தலைவர் பில்லன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட திமுக செயலாளர் முபாரக் அனைவரையும் வரவேற்றார்.குன்னூர் தொகுதி வேட்பாளர் ராமசந்திரன், கூடலூர் தொகுதி வேட்பாளர் காசிலிங்கம், மாவட்ட துணைச் செயலாளர்கள் ரவிகுமார், தமிழ்செல்வன், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, பாண்டியராஜ், இளங்கோவன், செந்தில், ராஜூ, மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் பொன்தோஸ், மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், வரும் சட்டமன்ற பொதுதேர்தலில் நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகை, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய அயராது உழைப்பது எனவும் இதற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் பணி குழு அமைத்து தேர்தல் பணியை மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business