பூங் கரகம் எடுக்க அனுமதி: பக்தர்கள் நன்றி தெரிவித்தனர்

பூங் கரகம் எடுக்க அனுமதி: பக்தர்கள் நன்றி தெரிவித்தனர்
X
உதகை அருகே உள்ள பொக்காபுரம் கோவிலில் கரகம் எடுக்க அனுமதி அளித்த உள்ளாட்சித் துறை அமைச்சருக்கும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் பக்தர்கள் நன்றிகளை தெரிவித்தனர்

ஆண்டுதோறும் இக்கோவிலில் ஐந்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தமிழ்நாடு,கேரளா ,கர்நாடகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தமிழக அரசு பல கோவில் திருத்தலங்களில் நடைபெறும் திருவிழாக்களை ரத்து செய்தது. மேலும் படிப்படியா தளர்வுகளையளித்து வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் செல்லலாம் என அனுமதித்தது.

இதனால் அனைத்து வழிபாட்டு தலங்களும் தற்போது கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஆண்டுதோறும் உதகை அருகே உள்ள பொக்காபுரம் கோவிலில் கோலாகலமாக நடைபெறும் திருவிழாவில் பொதுமக்கள் கரகம் எடுத்து பூ கரகம் எடுத்து வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.

எனவே இந்தமுறை நடைபெறும் திருவிழாவில் பூ கரகம் எடுக்க வேண்டி பூ கரக சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் இரண்டு முறை மனு அளித்தும் இன்று உள்ளாட்சித்துறை அமைச்சர் வருகையின்போது மீண்டும் மனு அளித்தனர். இதையடுத்து அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கரகம் எடுக்க அனுமதி அளித்ததையடுத்து உதகை பூ கரக சங்கத்தினர் நன்றிகளை தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!