வளர்ச்சி பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்

வளர்ச்சி பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்
X
மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் நடைபெறும் வளர்ச்சி பணியிணை நீலகிரியில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியம் பால கொலா ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் 52 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

உதகை ஊராட்சி ஒன்றியத்தில் பாலகொலா ஊராட்சிக்குட்பட்ட மாசிகண்டி என்னும் பகுதியில் மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூபாய் 5.43 லட்சம் மதிப்பில் வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் வழங்கும் பணியையும் கேர் கண்டி பகுதியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 5.27 லட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் தரை மட்ட நீர் தேக்கத் தொட்டி மற்றும் வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் வழங்கும் பணியினையும் இத்தலார் ஊராட்சியில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி திட்டத்தின் கீழ் 20 . 74 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட உமர் கண்டி சாலை பணியினையும் அதே ஊராட்சியில் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் 23 லட்சம் மதிப்பில் முடிக்கப் பட்ட பட்டி கிராம சாலை பணியும் என மொத்தம் 52 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா அமாலினி செயற்பொறியாளர் சுஜாதா, உதவி பொறியாளர் வித்யா, உதகை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜனார்தனன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதரன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!