ஊட்டியில் குடிநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

ஊட்டியில் குடிநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
X

குடிநீர் சேமிப்பு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் அருணா 

குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில், மாணவ-மாணவிகள் பதாகைகளுடன் பங்கேற்றனர்

நீலகிரியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில், நீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு பிரச்சார வாகனம் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதனை மாவட்ட ஆட்சியர் அருணா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து பொது மக்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கினார். ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி, சேரிங் கிராஸ், கமர்சியல் சாலை வழியாக ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சென்று நிறைவடைந்தது.

இதில் ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 85 மாணவ, மாணவிகள், அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட 100 பேர் பங்கேற்று விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர்.

முன்னதாக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தில் திரையிடப்பட்ட மழைநீர் சேகரிப்பு தொடர்பான குறும்படங்களை பள்ளி மாணவ, மாணவிகளுடன் ஆட்சியர் பார்வையிட்டார்.

அதனை தொடர்ந்து, விழிப்புணர்வு வாகனத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வாகனத்தின் மூலம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் குறும்படங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும்.

இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சௌந்திரராஜன், ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் மகராஜ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் சுதாகர், உதவி பொறியாளர் சங்கீதா, துணை நிலநீர் வல்லுநர் குருமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்