/* */

'அம்ரித் பாரத்' திட்டத்தில் பாரம்பரியம் மாறாமல் ரயில் நிலையங்களில் புனரமைப்பு பணி!

குன்னூர், ஊட்டி மலை ரயில் நிலையங்களை பாரம்பரியம் மாறாமல் புதுப்பொலிவு படுத்த, 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் பணிகள் நடந்து வருகிறது.

HIGHLIGHTS

அம்ரித் பாரத் திட்டத்தில் பாரம்பரியம் மாறாமல் ரயில் நிலையங்களில் புனரமைப்பு பணி!
X

குன்னூர் ரயில் நிலையம் 

கடந்த, 1854ல், மேட்டுப்பாளையத்தில் இருந்து, குன்னூர் வரை, 25 லட்சம் ரூபாய் மதிப்பில், நீலகிரி ரயில்வே கம்பெனியால், நீலகிரி மலை ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. 1899ல் ஜூன் 15ம் தேதி மெட்ராஸ் ரயில்வே சார்பில் போக்குவரத்துக்கு துவங்கியது.

தொடர்ந்து, 24.40 லட்சம் ரூபாய் மதிப்பில், குன்னூர் முதல் ஊட்டி வரை அமைக்கப்பட்ட ரயில் பாதையில், 1908ல் அக்., 15ல் போக்குவரத்து துவங்கியது.

மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை மீட்டர் கேஜ் பிரிவில், 46.61 கி.மீ. துாரம் கொண்ட இந்த ரயில் பாதையில்; 208 வளைவுகள்; 250 பாலங்கள்; 16 சுரங்கங்கள் உள்ளன.

தற்போதும், 'எக்ஸ்' கிளாஸ் என்ஜின்கள் மூலம், நம் நாட்டில் மீட்டர் கேஜ் பாதையில் இயங்கி வரும் ரயில் என்ற பெருமையும் உள்ளது. 2005ல் 'யுனெஸ்கோ' பாரம்பரிய அந்தஸ்து பெற்ற இந்த மலை ரயிலுக்கு பெருமை சேர்க்கிறது. மேட்டுப்பாளையம், கல்லாறு, ஆடர்லி, ஹில் குரோவ், ரன்னிமேடு, குன்னூர், வெலிங்டன், அருவங்காடு, கேத்தி, லவ்டேல், ஊட்டி ஸ்டேஷன்கள் இருந்த போதும், தற்போது, 3 ஸ்டேஷன்கள் மட்டுமே பிரசித்தி பெற்றதாக உள்ளது

இந்நிலையில், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், பாரம்பரியமிக்க மலை ரயில் மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. அதில், ஊட்டி ரயில் நிலையம், 7 கோடி ரூபாய்; குன்னூர் ரயில் நிலையம், 6.7 கோடி ரூபாய்; மேட்டுப்பாளையம், 8 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டு வருகிறது.

அதில், குன்னுர், ஊட்டி ரயில்நிலையங்களை பொலிவுபடுத்தி, சுற்றுலா பயணிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல்; அகலமான பாதைகள் அமைத்தல்; இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பார்க்கிங் வசதி; முகப்பு மற்றும் பிரதான நுழைவாயில்களை உயர்த்தி எல்.இ.டி., அமைத்தல், முன்புற அலுவலகங்கள், காத்திருப்பு கூடம், தண்ணீர், கழிப்பிடம், பிளாட்பாரம் மற்றும் குடியிருப்புகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்படஉள்ளன.

மலை ரயில்ரத அறக்கட்டளை நிறுவன தலைவர் நடராஜன் கூறுகையில், 'யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து கிடைத்துள்ள மலை ரயிலுக்கான உத்தரவுகள் மீற கூடாது. தற்போது, மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளில் பாரம்பரியம் மாறாமல் மேற்கொள்ள வேண்டும்.

தற்போது, பாரம்பரிய பணிமனை உள்ள, குன்னூர் ரயில் நிலைய முகப்பு மண்டபம் தோண்டப்பட்டது. இதனை தோண்ட கூடாது, என, தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டடம் மறைக்கும் அளவில் இல்லாமல் மேம்படுத்த வேண்டும் என்றார்.

Updated On: 21 Feb 2024 1:46 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் ராசாத்தி நீ வாழணும், அதை எந்நாளும் நான் பார்க்கணும் - பாடல்...
  2. வீடியோ
    🔴 LIVE : நான் இங்க சும்மா வந்து உட்காரல | Karunas ஆவேச பேச்சு ! |...
  3. திருவண்ணாமலை
    ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் ஆட்சி அமைப்பார்: ரோஜா நம்பிக்கை
  4. தமிழ்நாடு
    4வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் தற்கொலை
  5. வீடியோ
    தயாரிப்பாளருக்கும் ஒன்னும் இல்ல படைப்பாளருக்கும் ஒன்னும் இல்ல !#seeman...
  6. வீடியோ
    அரசே எல்லாம் பண்ணிட்டு இப்போ ஆக்கிரமிச்சுட்டாங்கனு சொல்றாங்க !#seeman...
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் 1.5 கோடி ரூபாய் கொள்ளை; பொய் புகார் தந்த பாஜக நிர்வாகி
  8. வீடியோ
    அரசுக்கு சாராயத்தை தவிர வேற என்ன வருமானம் இருக்கு !#seeman...
  9. ஆன்மீகம்
    சங்க தமிழ் மூன்றும் தருபவனே, விநாயகா..!
  10. சூலூர்
    கோவை அருகே கருமத்தம்பட்டியில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் :3 பேர் கைது