குன்னூர் மழை பனிமூட்டம்: வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு செல்ல உத்தரவு

குன்னூர் மழை பனிமூட்டம்: வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு செல்ல உத்தரவு
X
தொடா் மழை காரணமாக டால்பின் நோஸ் காட்சிமுனைக்குச் செல்லும் சாலையில் பனி மூட்டம் அதிகமாக உள்ளது. விபத்துகளை தடுக்க காவல்துறையினர் அறிவுறுத்தல்

ஊட்டி,குன்னூரில் தொடா்மழை காரணமாக பகல் நேரத்தில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் குன்னூர் டால்பின் நோஸ் மற்றும் லேம்ஸ்ராக் காட்சிமுனைக்கு வாகனங்களில் செல்வோா் பாதுகாப்பு கருதி வாகனங்களின் முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்ல வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

நீலகிரி மாவட்டம், குன்னூரிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் டால்பின் நோஸ் மற்றும் லேம்ஸ்ராக் காட்சிமுனை உள்ளது. இப்பகுதிக்குச் செல்லும் வழியில் உயா்ந்த மலைகள், தேயிலைத் தோட்டங்கள் உள்ளன.

மேகமூட்டத்துக்கு நடுவே அமைந்த டால்பினோஸ் பாறை, இம்மலையின் வலது மற்றும் இடது புறங்களில் உள்ள பரவ சமூட்டும் பள்ளத்தாக்குகள், மறுபக்கத்தில் கேத்தரின் அருவி என பல சுற்றுலாத்தலங்கள் உள்ளதால் இப்பகுதிகளைக் கண்டு ரசிக்க தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.

இந்நிலையில் தொடா் மழை காரணமாக டால்பின் நோஸ் காட்சிமுனைக்குச் செல்லும் சாலையில் பனி மூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் சாலையில் எதிரே வரும் வாகனங்களைக் கண்டறிந்து வாகனங்களை இயக்குவது சிரமமாக உள்ளதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனா்.

பகல் நேரத்திலும் கடும் பனி மூட்டமாக உள்ளதால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பு கருதி வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனத்தை கவனமுடன் இயக்க வேண்டும் என காவல் துறையினா் அறிவுறுத்தியுள்ளனர்.

ஊட்டி - குன்னூரில் பல பகுதிகள் அடர்ந்த பனி மூட்டமாக காணப்படுவது சுற்றுலாபயணிகளுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா