கூடலூரில் புதிய பேருந்து நிலையம், பணிமனை: ஆ ராசா திறந்து வைத்தார்

கூடலூரில் புதிய பேருந்து நிலையம், பணிமனை: ஆ ராசா திறந்து வைத்தார்
X

கூடலூர் பேருந்து நிலையத்தை திறந்து வைக்கும் ஆ ராசா எம்பி

கூடலூரில் புதிதாக கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம், பணிமனையை நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா திறந்து வைத்தார்

கூடலூரில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையம், அரசு போக்குவரத்துப் பணிமனையை நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா திறந்துவைத்தார். கூடலூரில் ரூ. 5.42 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம், அரசு போக்குவரத்துப் பணிமனை கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மு.அருணா தலைமை வகித்தார். போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா், சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

புதிய பேருந்து நிலையம் மற்றும் பணிமனையை நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் கூடலூா் கோட்டாட்சியா் செந்தில்குமார், வட்டாட்சியா் ராஜேஸ்வரி, அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநா் ஜோசப் டயாஸ், பொது மேலாளா் நடராஜன், நகராட்சி ஆணையா் பிரான்சிஸ் சேவியா், தொமுச பொதுச் செயலாளா் நெடுஞ்செழியன், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் கீா்த்தனா, நகரச் செயலாளா் இளஞ்செழியன் மற்றும் தொமுச நிர்வாகிகள், போக்குவரத்து ஊழியா்கள் பங்கேற்றனா்.

Tags

Next Story
ai in future agriculture