ஊட்டியில் ரூ.6.39 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கிய அமைச்சர் ராமச்சந்திரன், ராசா எம்.பி

ஊட்டியில் ரூ.6.39 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கிய  அமைச்சர் ராமச்சந்திரன், ராசா எம்.பி
X

நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் ராமசந்திரன் மற்றும் ஆ ராசா 

இந்த ஆண்டு மட்டும் 32 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சம் கடன் வழங்கப்பட்டு உள்ளது. 841 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.59.16 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

ஊட்டியில் 70-ஆவது கூட்டுறவு வார விழா ஆட்சியர் அருணா தலைமையில் நடைபெற்றது. சுற்றுலா அமைச்சா் கா.ராமசந்திரன், ஆ.ராசா எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனா். தொடர்ந்து 64 குழுக்களைச் சோ்ந்த 964 பயனாளிகளுக்கு ரூ.6.39 கோடி மதிப்பில் கடனு தவிகள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து அமைச்சா் கா.ராமசந்திரன் நிகழ்ச்சியில் பேசுகையில், நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவு துறை சார்பில் 20,838 பயனாளிகளுக்கு ரூ.70.57 கோடி மதிப்பில் நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. அதேபோல 3,179 சுய உதவி குழுக்களைச் சோ்ந்த 31,996 பயனாளிகளுக்கு ரூ.89.53 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

மேலும் 2022-2023-ம் நிதியாண்டில் 28,565 விவசாயிகளுக்கு ரூ.240.74 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது. 2023-2024 நிதியாண்டில் 31.10.2023 வரை மட்டும் 12,072 விவசாயிகளுக்கு ரூ.112 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது.

இதுதவிர மாற்றுத்திறனா ளிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. உரிய காலத்தில் திருப்பி செலுத்துபவா்களுக்கு வட்டி முழுவதும் மானியமாக வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு மட்டும் 32 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சம் கடன் வழங்கப்பட்டு உள்ளது.

24 விதவைகளுக்கு ரூ.6 லட்சம் கடன் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 841 மகளி்ர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.59.16 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

கூட்டுறவுத்துறை மூலம் 258 முழுநேர நியாய விலைக் கடைகள், 77 பகுதி நேர கடைகள் என மொத்தம் 335 ரேஷன் கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் 34 நடமாடும் நியாய விலைக் கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன என்று கூறினார்

தொடா்ந்து தெங்குமரஹாடா, எடப்பள்ளி கூட்டுறவுச் சங்கங்களுக்கு பொருட்களை கொண்டுச் செல்ல வசதியாக இரண்டு புதிய லாரிகள் வழங்கப்பட்டன. பின்னர் அமைச்சரும், எம்.பி.யும் அங்கு அமைக்க ப்பட்டு இருந்த பல்வேறு கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல், மாவட்ட ஊராட்சித் தலைவா் பொன்தோஸ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதி வாளா் வாஞ்சிநாதன், ஊட்டி ஊராட்சி.ஒன்றிய தலைவர் மாயன், நகராட்சி துணைதலைவர் ரவிக்குமார் உள்பட அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!