கோத்தகிரியில் குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி திரிந்த சிறுத்தை

கோத்தகிரியில் குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி திரிந்த சிறுத்தை
X

சிசிடிவியில் பதிவான சிறுத்தை நடமாட்டம்

சிறுத்தை சுற்றி திரியும் வீடியோ இணையத்தில் வைரல், கூண்டு வைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை

கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிரித்து வருகிறது. குறிப்பாக காட்டெருமை, சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அவ்வாறு வரும் வனவிலங்குகள் வீடுகளை சேதப்படுத்தி, வீட்டில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்தி செல்கிறது.

கோத்தகிரி அருகே அரவேனு பெரியார் நகர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு இந்த குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை ஒன்று புகுந்தது.

இந்த சிறுத்தை வெகுநேரமாக குடியிருப்பு பகுதியிலேயே சுற்றி திரிந்தது. பின்னர் அங்கிருந்து வன த்திற்குள் சென்று விட்டது. இந்த காட்சிகள் அனைத்தும், அங்குள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காமிராக்களில் பதிவாகி இருந்தது.

இதனை பார்த்த குடியிருப்பு வாசிகள் தங்கள் பகுதிக்குள் சிறுத்தை நடமாடியதால் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து மக்கள் கூறும்போது, இந்த பகுதியில் இரவு நேரத்தில் சிறுத்தை வந்து சென்றுள்ளது. இனி இது தொடர்ந்து வரலாம்.

சிறுத்தை ஊருக்குள் வந்ததால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். அவர்கள் வீடுகளை விட்டு வெளியில் வரவும் தனியாக செல்லவும் பயப்படுகின்றனர்

எனவே சிறுத்தையை கண்காணித்து ஊருக்குள் வராமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனத்திற்குள் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் புளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டத்தில் கோத்தகிரி நகரில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. அவை இந்த பகுதியில் உள்ள புதர்களில் மறைந்து நின்று தாக்குகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

எனவே கோத்தகிரி பகுதியில் உள்ள புதர்கள் மற்றும் செடி-கொடிகளை அகற்ற வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!