குன்னூர் காட்டேரி அணையில் குதித்து பெண் தற்கொலை

குன்னூர் காட்டேரி அணையில் குதித்து பெண் தற்கொலை
X

தற்கொலை செய்து கொண்ட பெண்.

தீராத தலைவலி தொடர்ந்து இருந்து வந்தததால் தற்கொலை செய்துள்ளார் என போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி அணை அருகே உள்ள தூரட்டி கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ் வயது 54 . இவரது மனைவி புஷ்பா வயது 45. இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன்கள் உள்ளனர். மூவருக்கும் திருமணமாகி பெங்களூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தூரட்டி அருகே உள்ள காட்டேரி அணைக்கு சென்ற புஷ்பா, அணையை கடந்து செல்லும் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

புஷ்பா தண்ணீரில் குதித்ததை நேரில் பார்த்த சிலர் கூச்சலிட்டுள்ளனர். ஆனால் அவர் அதற்குள் தண்ணீரில் மூழ்கி விட்டார். நீண்ட நேரம் கழித்து அவரது உடல் பாலத்தின் ஓரத்தில் தலைகீழாக மிதந்து கொண்டிருந்தது. அப்பகுதி மக்கள் இதுகுறித்து லவ்டேல் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். காவல்துறையினர் வருவதற்குள் அங்கு கிராம மக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் காவல்துறையினர் அவரது உடலை மீட்டு வழக்குபதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் புஷ்பாவிற்கு தீராத தலைவலி தொடர்ந்து இருந்து வந்தததால் தற்கொலை செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.


Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!