குன்னூர் குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் உலா: பொதுமக்கள் அச்சம்

குன்னூர் குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் உலா: பொதுமக்கள் அச்சம்
X

குன்னூர் அருகே தனியார் தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுள்ள யானைக் கூட்டம்.

குன்னூர் சின்ன கரும்பாலம் அருகே குட்டியுடன் உலா வரும் காட்டு யானைகளால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தனியார் தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டு இருந்த யானைக் கூட்டம் தற்போது நெடுஞ்சாலை ஓர ஓடைப்பகுதியில் முகாமிட்டு உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தனியார் தேயிலைத் தோட்டத்தில் குட்டிகளுடன் முகாமிட்டு இருந்தது. இந்நிலையில் காட்டு யானைக் கூட்டம் சமவெளிப் பகுதிகளில் நிலவும் வறட்சி காரணமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி மலைப் பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளது. தேயிலை தேயிலை தோட்டங்களிலும், வனப்பகுதிகளிலும் முகாமிட்டு இருந்த யானைக் கூட்டம் இரவு பெய்த மழை காரணமாக குடியிருப்பு பகுதிகள் அதிகம் நிறைந்த சின்ன கரும்பாலம் பகுதியில் உள்ள ஓடையில் முகாமிட்டு உள்ளது.

இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். இதனால் 24 மணி நேரமும் வனத்துறையினர் காட்டு யானை கூட்டத்தை கண்காணித்து குடியிருப்பு பகுதிகளில் வராதவாறு பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தேயிலைத் தோட்டங்களுக்கு பணி செல்வோர் கவனமுடன் செல்லவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

Tags

Next Story