கோத்தகிரி சாலையில் உலா வரும் காட்டு யானை... பொதுமக்கள் அச்சம்!
கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை, தட்டப்பள்ளம் சுற்றுவட்டாரபகுதிகளில் தற்போது பலாப்பழ சீசன் துவங்கி உள்ளது.
இதன் காரணமாக பலா மரங்களில் பலாக்காய்கள் காய்த்து குலுங்குகின்றன.
தற்போது சமவெளிப் பகுதிகளில் நிலவும் வறட்சி காரணமாகவும், உணவு மற்றும் தண்ணீர் தேடியும் அங்கிருந்து காட்டு யானைகள் வருடந்தோறும் கோடைகாலத்தில் சமவெளிப் பகுதிகளில் இருந்து நீலகிரி மலைப்பகுதிக்கு வந்து முகாமிட்டு வருவது வழக்கமாக உள்ளது.
தற்போது கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ள குஞ்சப்பனை பகுதியில் பலா மரங்களில் காய்த்துள்ள பலாப்பழங்களை உண்பதற்காக காட்டு யானைகள் சாலையில் நடமாடி வருகின்றன.
இந்நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் ஆண் காட்டு யானை ஒன்று சாலையின் நடுவே நடந்து சென்றது.யானையைக் கண்ட வாகன ஓட்டிகள் சற்று தொலைவிலேயே பாதுகாப்பாக தங்களது வாகனங்களை நிறுத்தினர்.
இதனால் சற்று நேரம் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சற்று நேரம் சாலையிலேயே நடந்து சென்ற காட்டு யானை பின்னர் அருகிலிருந்த வனப்பகுதிக்குள் சென்றது.அதற்கு பின்னர் சாலையில் போக்குவரத்து சீரானது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu