குன்னூரில் காட்டெருமை பலி - வனத்துறையினர் விசாரணை

குன்னூரில் காட்டெருமை பலி - வனத்துறையினர் விசாரணை
X
குன்னூர் சோலடாமட்டம் பகுதியில், காட்டெருமை உயிரிழந்தது குறித்து, வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டெருமைகள் பல்வேறு கிராம பகுதிகளிலும், நகர பகுதிகளிலும் உலா வருவது, மக்களை அச்சதில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி, தேயிலை தோட்டங்களில் உலா வரும் காட்டெருமையால், தேயிலை விவசாயிகள் பாதிப்படைந்து வருகின்றனர். குன்னூர் அருகேயுள்ள சோலடாமட்டம் பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் காட்டெருமையின் அச்சுறுத்தலால் அவ்வழியாக பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகுந்த அவதிகுள்ளாகி வருகின்றனர்.

இதனிடையே, அப்பகுதியில் 4 வயது மதிப்புள்ள காட்டெருமை ஒன்று இறந்து கிடப்பதாக, அவ்வழியாக சென்ற தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், காட்டெருமையானது வனவிலங்குகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழந்துள்ளதா? அல்லது விஷப்புற்கள் உண்டு உயிரிழந்துள்ளதா? அல்லது வேறு காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!