குன்னூரில் மரம் விழுந்து ஆசிரியை பலி

குன்னூரில் மரம் விழுந்து ஆசிரியை பலி
X

உயிரிழந்த ஆசிரியை மகேஸ்வரி.

ஆசிரியர் பணியை முடித்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது மரம் விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக சாரல் மழையும், கடும் குளிரும் நிலவி வருகிறது. இந்த நிலையில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதில் குன்னூர் ஜெகதளா ஓதனட்டி கிராமத்தில் கற்பூர மரம் விழுந்தது. அப்போது ஆசிரியர் பணியை முடித்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த வண்டிச்சோலை அரசு நடுநிலைபள்ளி ஆசிரியை மகேஸ்வரி 52), மீது இந்த மரம் விழுந்தது.

இதில் தலை மற்றும் கைகால்களில் பலத்த காயம் ஏற்பட்டு ஊட்டி அரசு மருத்துவமனையில் மகேஸ்வரி அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தொடர்ந்து இப்பகுதியில், இன்று வருவாய்துறையினர் ஆய்வு செய்து, ஆபத்தான மரங்களை அகற்றுவது குறித்து மாவட்ட நிர்வாகத்து தகவல் அளித்துள்ளனர். இந்த சம்பவம் குன்னூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா