கோத்தகிரி சாலையில் உலா வந்த காட்டு யானையால் போக்குவரத்து பாதிப்பு

கோத்தகிரி சாலையில் உலா வந்த காட்டு யானையால் போக்குவரத்து பாதிப்பு
X

கோத்தகிரி சாலையில் காட்டு யானை வழி மறித்ததால் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கோத்தகிரியிலிருந்து மேட்டுபாளையம் செல்லும் சாலையில் ஒற்றை காட்டு யானை வழிமறித்ததால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

கோத்தகிரி சாலையில் பலாப்பழ சீசன் துவங்கியுள்ள நிலையில் யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.

கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கு யானைகள் கூட்டம் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் இன்று அதிகாலை குஞ்சப் பண்ணை சாலையில் ஒற்றை காட்டு யானை சாலையில் முகாமிட்டது இதனால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த வாகன ஓட்டிகள் யானை வனப்பகுதிக்குள் சென்றவுடன் வாகனங்கள் சென்றன.

தேசிய நெடுஞ்சாலையில் யானை வழி மறித்ததால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!