குன்னூரில் தீயணைப்ப்பு துறை சார்பில் செயல்முறை விளக்கம்

குன்னூரில் தீயணைப்ப்பு துறை சார்பில் செயல்முறை விளக்கம்
X

குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் தலைமையில் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

கனமழை பெய்யும் போது மரங்களுக்கு அடியில் வாகனங்களை நிறுத்த கூடாது என தீயணைப்பு துறையினர் அறிவுறுத்தினர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் தற்போது மழை அதிகமாக பெய்து வருகிறது. இதனால் குன்னூரில் பல்வேறு இடங்களில் மண்சரிவு மற்றும் மரங்கள் விழுந்து இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்படுகிறது. இதுபோன்ற காலங்கள் பொது மக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டும். மேலும் மருத்துவமனை மற்றும் பொது மக்கள் கூடும் இடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் தலைமையில் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் தீ எந்த வகையை சேர்ந்தது என கண்டறிந்து, அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்று செய்து காட்டப்பட்டது. மேலும் பேரிடர் காலங்களில் கன மழை பெய்யும் போது மரங்களுக்கு அடியில் வாகனங்களை நிறுத்த கூடாது எனவும் தீயணைப்பு துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags

Next Story
why is ai important to the future