மாற்றுதிறனாளிக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நீலகிரியில் அமைச்சர் துவக்கிவைத்தார்

மாற்றுதிறனாளிக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி  நீலகிரியில் அமைச்சர் துவக்கிவைத்தார்
X

நீலகிரி மாவட்டத்தில் மாற்றுததிறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை அமைசசர் தொடங்கி வைத்தார்.

நீலகிரியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை வனத்துறை அமைச்சர் .ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்..

நீலகிரி மாவட்டத்திலுள்ள அணைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நேற்றும் இன்றும் நடைபெறுகிறது. இந்த முகாமை தாவனை அருகே உள்ள மாற்றுத்திறனாளிகள் குடியிருப்புக்கு சென்று அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்துவக்கி வைத்தார்.

சுமார் 175 மாற்று திறனாளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது..சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டியளிக்கையில்: -

நீலகிரி மாவட்டத்தில் விளையும் பசுந்தேயிலையை குறிப்பிட்ட காலத்திற்குள் பறித்து எடுக்காவிட்டால், அவை அனைத்தும் பயனற்றதாக மாறிவிடும் என்பதால் பசுந்தேயிலை விவசாயிகள் தங்களது பணியை மேற்கொள்ள சிறப்பு அனுமதி வழங்கப் படுவதாகவும் , அரசு வகுத்துள்ள உரிய நெறிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியுடன் பணி மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் ராமச்சந்திரன் அறிவுறுத்தினார்.

இந்த நிழ்ச்சியில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் சுகாதாரத் துறையினர் என அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!