குன்னூர் அருகே மஞ்சூர் பகுதியில் படுகரின மக்களின் மாரியம்மன் திருவிழா

குன்னூர் அருகே மஞ்சூர் பகுதியில் படுகரின மக்களின் மாரியம்மன் திருவிழா
X

சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த மாரியம்மன்.

குன்னூர் அருகே மஞ்சூர் பகுதியில் படுகரின மக்களின் 2 நாட்கள் நடந்த திருவிழா நிறைவடைந்தது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் படுகர் இன மக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர்.

அவர்கள் ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கிராமங்களில் மாரியம்மன் திருவிழா வெகு விமர்சையாக நடத்தி வருகின்றனர்.

மஞ்சூர் அருகே குந்தா தூனேரி கிராமத்தில் மாரியம்மன் திருவிழா சிறப்பு பூஜையுடன் தொடங்கியது.

இன்று காலை 6 மணிக்கு கணபதி பூஜை நடைபெற்றது. காலை 11 மணியளவில் நாராயணமூர்த்தி கோவிலில் இருந்து அம்மனை அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

முக்கிய வீதிகளில் சுவாமி உலா வந்தார். பின்னர் படுகர் இன மக்கள் தங்களது பாரம்பரிய நடனம் ஆடினர். 2 நாட்கள் நடந்த திருவிழா நிறைவடைந்தது.

Tags

Next Story
ai in future agriculture